search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட் வீரர்"

    • தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிப்ஸ் தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார்.
    • கிப்ஸ் பற்றி விராட் கோலி பேசிய அந்த பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    2008 ஆம் ஆண்டு 19 வயதிற்குப்பட்டோருக்கான உலகக்கோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது.

    அப்போது, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிப்ஸ் தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார்.

    கிப்ஸ் பற்றி விராட் கோலி பேசிய அந்த பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்நிலையில் விராட் கோலியின் இந்த வீடியோ குறித்து தென்னாபிரிக்க வீரர் கிப்ஸ் இடம் கேள்வி எழுப்பட்டபோது.

    அதற்கு பதில் அளித்த அவர், கோலியின் இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பலரும் என்னை டேக் செய்கிறார்கள். அப்போது தன அந்த வீடியோவை நான் பார்த்தேன். எனக்கு அது இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். சர்வதேச கிரிக்கெட்டில் அவருடைய சிறப்பான விளையாட்டால் அவருக்கு சிறப்பான மரியாதையை கிடைத்துள்ளது.

    குறிப்பாக ஒருநாள் கிரிக்கெ போட்டியின் சேஸிங்கில் ரன்களை துரத்தி வெற்றி பெறுவதில் அவர் காட்டும் உத்வேகம் தான் மற்ற வீரர்களை விட கோலியை தனித்துவமானவராக காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

    • டெண்டுல்கர் 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார்
    • மொத்தம் 34,347 ரன்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்

    சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 51 - வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு கிரிக்கெட் உலக வீரர்கள்,மற்றும் நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    டெண்டுல்கர் 24- 4- 1973-ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். டெண்டுல்கருக்கு தற்போது 51 வயதாகிறது. கிரிக்கெட்டின் கடவுள் என்று சச்சின் அழைக்கப்படுகிறார்.சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் வருமாறு :-




    டெண்டுல்கர் 11 வயதில் கிரிக்கெட் விளையாட்டில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அவரது மூத்த சகோதரர் அஜித் டெண்டுல்கர் அவரை ஊக்குவித்தார்.

    1988 -ல், 15 வயதில் சச்சின் டெண்டுல்கர், குஜராத்திற்கு எதிராக ரஞ்சி டிராபி ஆட்டத்தில் பம்பாய்க்காக முதல் தடவையாக கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் சதம் அடித்த அவர், முதல்தர போட்டியில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.




    ரஞ்சி டிராபி, இரானி டிராபி மற்றும் தியோதர் டிராபி ஆகிய 3 உள்நாட்டுப் போட்டிகளிலும் அறிமுகத்திலேயே சதம் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வீரர் இவர்.

    டெண்டுல்கர் 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். அவர் 664 போட்டிகளில் ஆடியுள்ளார்.

    மொத்தம் 34,347 ரன்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச வரலாற்றில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர் தான். 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது இணையற்ற பேட்டிங் நுட்பங்களால் கிரிக்கெட் உலகில் ஜொலித்தார்.



    இவரது சாதனைகளுக்காக இந்திய அரசு டெண்டுல்கருக்கு பல விளையாட்டு விருதுகளை வழங்கி கவுரவித்தது. 1994 -ல் அர்ஜுனா விருது, 1997 -ல் கேல் ரத்னா விருது, 1998 -ல் பத்மஸ்ரீ, 2008 -ல் பத்ம விபூஷன் ,2013 -ல் பாரத ரத்னா விருதுகளை பெற்றுள்ளார்.

    • நொய்டா இன்ஜினியரான விகாஸ் நேகி கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்.
    • இவர் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள அடிக்கடி கிரிக்கெட் விளையாடி வந்தார்.

    நொய்டா இன்ஜினியரான விகாஸ் நேகி கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர். இவர் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள அடிக்கடி கிரிக்கெட் விளையாடி வந்தார்.

    அப்படி ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடி கொண்டிருந்த அவர் ஒரு ரன் எடுக்க ஓடினார். அப்போது சக வீரரிடம் கைகுலுக்கி விட்டு அப்படியே மைதானத்தின் நடுவே மயங்கி கீழே விழுந்தார். அவர் விழுந்ததை கண்ட விக்கெட் கீப்பர் அவரை நோக்கி ஓடினார். மற்ற வீரர்களும் உதவிக்கு விரைந்தனர்.

    பின்னர் அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    நொய்டாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இன்ஜினியர் மாரடைப்பால் மைதானத்தில் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, இனி போர்க்களத்தில்தான் பேச வேண்டும் என கிரிக்கெட் வீரர் காம்பிர் ஆவேசமாக கூறியுள்ளார். #PulwamaAttack #GautamGambhir
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.



    இந்த தாக்குதலை பிரதமர் மோடி கடுமையாக கண்டித்துள்ளார். பயங்கரவாதிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும், அதற்கான பெரிய விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் மோடி எச்சரித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுப்பதற்காக பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர், டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘இப்போது பிரிவினைவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் அந்த பேச்சுவார்த்தை போர்க்களத்தில் இருக்க வேண்டும். பொறுத்தது போதும்’ என்று காம்பிர் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் கூறுகையில், “நமது வீரர்கள் மீதான கொடூர தாக்குதலைக் கேட்டு கவலையும் வேதனையும் அடைந்தேன். நமது வீரர்கள் பலர் மரணம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.

    இதேபோல் ஷிகர் தவான், மயாங்க் அகர்வால், முகமது கைப், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களும் கண்டனம் தெரிவித்து டுவிட் செய்துள்ளனர். #PulwamaAttack #GautamGambhir
    தொடர்ந்து சொதப்பலாக விளையாடிவருகிறார் என பேஸ்புக்கில் விமர்சித்த ரசிகரை மோசமான வார்த்தையால் திட்டிய கிரிக்கெட் வீரர் ஷபீர் ரஹ்மான் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளார். #SabbirRahman
    டாக்கா:

    வங்கதேச கிரிக்கெட் அணி வீரரான ஷபீர் ரஹ்மான், அதிரடி பேட்டிங்குக்கு மட்டுமில்லாமல் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். 2016-ம் ஆண்டு பெண் விருந்தினரை அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அழைத்து வந்தது முதல் , சிறுவனை தாக்கியது வரை பல்வேறு விவகாரங்களில் சிக்கி அபராதங்களும், தடைகளையும் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போட்டி முதல் ஷபீர் ரஹ்மான் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவதால் இவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இதையடுத்து, ரசிகர் ஒருவர் ஷபீரின் மோசமான பார்ம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகரின் நண்பர் ஷபீருக்கு அதனை பகிர, கடும் கோபம் கொண்ட ஷபீர் அந்த ரசிகரை, தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்குதல் விடுப்பதாக மிரட்டியுள்ளார்.  

    இந்த விவகாரம் அந்நாட்டு கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் மீது விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 
    குஜராத் மாநிலத்தில் கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault
    ராஜ்கோட்:

    இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா தற்போது ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வருகிறார். குஜராத் ஜாம்நகரில் இவருடைய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    ஜடேஜாவின் மனைவி ரீவா நேற்று முன்தினம் தனது தாயார் பிரபுல்லபாவுடன் ஜாம் நகரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார், அங்கு வேகமாக வந்த போலீஸ்காரர் சஞ்சய் அகிர் என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது லேசாக மோதிவிட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், ரீவாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவரது கூந்தலை பிடித்து இழுத்து, தலையை கார் கண்ணாடி மீது பலமாக மோத வைத்து 3 முறை கன்னத்திலும் அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உடன் இருந்த அவரது தாயார் போலீசில் புகார் செய்தார்.

    இதற்கிடையே டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் மாநில முதல்-மந்திரி அலுவலகம் உள்ளூர் எம்.எல்.ஏ. தர்மேந்திரசிங்கை தொடர்பு கொண்டு இது தொடர்பாக குறிப்பு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டன.

    இதையடுத்து, ஜாம்நகர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவு செய்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சஞ்சய் அகிரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டது.  #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault
    குஜராத் மாநிலத்தில் கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவியை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கியுள்ளார். #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault

    காந்திநகர்:

    இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்று போட்டியில் விளையாட தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை அணி மும்பையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது. 

    குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் ஜடேஜா, தனது மனைவி ரிவபா காரில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற கார் முன்பு சென்று கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அகிர் பைக் மீது மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து ஜடேஜா மனைவி காரை விட்டு இறங்கினார்.

    அப்போது ஆத்திரமடைந்த போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய், ஜடேஜா மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். பொதுமக்கள் அவரை தடுக்கும் வரை தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஜடேஜாவின் மனைவி காயமடைந்தார்.

    இதுகுறித்து விவரம் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து ஜடேஜா மனைவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் மீது தாக்குதல் நடத்தியதாக போலீஸ் கான்ஸ்டபிள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault
    ×